சினிமா

தர்பாரில் இடம்பெற்ற சிறைகைதி குறித்த வசனம்! வெடித்த சர்ச்சையால் படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

Summary:

Controvarsy dialogue removed from movie

நடிகர் ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் அவர் மும்பைபோலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துள்ளார்.இதில்  ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். 

இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையி ல் இப்படம் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.

இந்நிலையில் தர்பார் திரைப்படத்தில் சிறையில் இருப்பவர்கள் எல்லாம் ஷாப்பிங் சென்று வருகின்றனர் என்ற வசனம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்தது.

 இந்நிலையில் லைக்கா நிறுவனம் இதுகுறித்து இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்
 பொதுவாக எழுதப்பட்ட வசனம் தான் அது.அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததால் நீக்கப்படுகிறது. அது தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பதல்ல என கூறியுள்ளது.

 


Advertisement