நடிகர் விசுவின் செயலால் எங்கள் பணிகளை சரியாக செய்ய முடியவில்லை; திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் விசுவின் செயலால் எங்கள் பணிகளை சரியாக செய்ய முடியவில்லை; திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்


complient-against-for-actor-visu

விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 

1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.

இந்நிலையில் இவர் மீது நடிகர் பாக்யராஜ், ரமேஷ் கண்ணா உள்ளிட்டவர்கள் தலைமையிலான திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

Latest tamil news

இந்த புகார் மனுவில் இவர்கள் கூறியுள்ளது... "இதற்கு முன்பு பதவியிலிருந்த விசு மற்றும் அவரை சார்ந்தவர்கள் தற்போது சங்கத்தின் கணக்கு வழக்கு விவரங்களை தங்களிடம் ஒப்படைக்காமலும், சங்க பணத்தை அறக்கட்டளைக்கு மாற்றியதோடு தங்களை வரவு செலவு செய்ய முடியாத படி செய்துள்ளனர் என கூறியுள்ளார்கள்" மேலும் இந்த வழக்கு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.