மனித உரிமை மீறல்! பரபரப்பு புகார்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா!!

மனித உரிமை மீறல்! பரபரப்பு புகார்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா!!


complaint-filed-against-nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் நடிகை நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணம் முடிந்த கையோடு இருவரும் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்றனர். 

அங்கு திருப்பதி மாட வீதிகளில் போட்டோ ஷீட் நடத்தியபோது நயன்தாரா காலில் செருப்பு அணிந்திருந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் திருப்பதி தேவஸ்தானம் இந்த செயலை கண்டித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனை தொடர்ந்து அதற்காக விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தற்போது கேரளாவிற்கு சென்றுள்ளனர்.

complaint

இந்த நிலையில் தற்போது நயன்தாரா மீது மற்றொரு புகார் கிளம்பியுள்ளது. அதாவது மாமல்லபுரத்தில் திருமணம் நடந்தபோது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பொதுமக்களால் கடற்கரை பகுதிக்கு செல்ல முடியவில்லை. கடற்கரை என்பது பொதுவான இடம். ஆனால் நயன்தாரா திருமணத்தின்போது அங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது மனித உரிமை மீறல் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.