இதுக்கு இரண்டாம் குத்து டீசர் பரவால்ல.. தீயாய் பரவும் கமிட்மெண்ட் படத்தின் டீசர்.. வீடியோ பாருங்க!

இதுக்கு இரண்டாம் குத்து டீசர் பரவால்ல.. தீயாய் பரவும் கமிட்மெண்ட் படத்தின் டீசர்.. வீடியோ பாருங்க!



Commitment Telegu movie teaser goes viral on Internet

கமிட்மென்ட் என்ற தெலுங்கு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரையில் வெளியானது. இந்த படத்தின் டீசர் வெளியான நாளில் இருந்து இந்த படத்தின் மீதான சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்தது.

இரண்டாம் குத்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த படத்தை தடைசெய்ய கோரியும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தது. இதனை அடுத்து படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் குத்து படத்திற்கு போட்டியாக தெலுங்கில் கமிட்மென்ட் என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பார்ப்பதற்கு இரண்டாம் குத்து படத்தின் டீசர் போல, டீசர் முழுவதும் ஆபாச காட்சிகளாக இடம் பெற்றுள்ளது. தெலுங்கு சினிமாவிலும் இதுபோன்ற அடல்ட் படங்கள் தலைதூக்கி வரும்நிலையில் இந்த படத்திற்கும் அங்கு தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.