ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மதுரையில் உள்ள வைகை புயல் வடிவேலுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் அனைவராலும் கொண்டாக்கூடிய நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் காமெடி நடிகர் வடிவேல். இவர் படங்களில் நடிக்கிறார் என்றால் அவரின் காமெடியை பார்ப்பதற்காக தனி ரசிகர்கள் பட்டாளம் திரையரங்குகளில் அலைமோதும்.
அந்த அளவிற்கு வடிவேலுவின் காமெடியை அனைத்து தரப்பினரும் விரும்பி பார்ப்பர். இந்நிலையில் சில காரணங்கள் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேல். இதனால் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்து வந்தனர். தற்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் இவரை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மதுரையை பூர்வீகமாக கொண்ட வடிவேலுவின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அப்புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.