அடக்கொடுமையே.. விக்ரமின் கோப்ராவிற்கு இப்படியொரு நிலைமையா?? இதுவரை உலகளவில் செய்த வசூல் எவ்வளவு பார்த்தீங்களா!!

அடக்கொடுமையே.. விக்ரமின் கோப்ராவிற்கு இப்படியொரு நிலைமையா?? இதுவரை உலகளவில் செய்த வசூல் எவ்வளவு பார்த்தீங்களா!!


cobra-movie-collection

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இருவரும் ஒன்றாக நடித்த மகான் படம் ஓடிடியில் வெளிவந்தது. இந்த நிலையில் கோப்ரா படம் ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

Vikran

இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் வித்தியாசமாக 7 கெட்டப் போட்டு கடுமையாக உழைத்துள்ளார். ஆனாலும் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில், கோப்ரா படம் வெளியாகி முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ.9.28 கோடி ரூபாயை வசூல் செய்தது. பின்னர் நாளுக்கு நாள் வசூல் மிகவும் குறைந்த நிலையில் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ. 48 கோடிதான் வசூல் செய்ததாக தகவல்கள் பரவி வருகிறது. இவ்வாறு சென்றால் படம் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் எனவும் கூறப்படுகிறது.