சினிமா

சென்னை 28 நடிகரும், பிரபல சினிமா நடிகையும் நடிக்கும் புத்தம் புதிய சீரியல் நாளை முதல் சன் டிவியில்! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

Summary:

பிரபல சினிமா நடிகர் மற்றும் நடிகை நடித்த புதிய சீரியலான அபியும் நானும் எனும் சீரியல் நாளை முதல் ஒளிபரப்பாகிறது.

தமிழ் டிவி தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்து சீரியலுக்கு பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். ஆனால் தற்போது பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இதனால் சீரியல்களால் சானல்களுக்கு நடுவே கடும் போட்டி நிலவுகிறது என்றே கூறலாம்.

ஆனாலும் இன்றுவரை trp ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பது சன் டிவி தான். அதற்க்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் பிரமாண்ட மற்றும் புதுப்புது சீரியல்கள் சீரியல்கள் தான். இந்தநிலையில் சன் டிவியில் புத்தம் புதிய சீரியலான "அபியும் நானும்" என்ற சீரியல் நாளை அக்டோபர் 26 முதல், மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

பிரபல சினிமா நடிகையான வித்யா மோகன், "அபியும் நானும்" சீரியலில் நடிக்கிறார். இவர் இதற்க்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி சீரியலில் நடித்து அந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் மீண்டும்  "அபியும் நானும்" சீரியலில்" நடிப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த சீரியலில் சென்னை 28 படத்தில் நடித்த நடிகர் அரவிந்த் ஆகாஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் ரசிகர்களிடையே இந்த சீரியல் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement