சினிமா

இறந்தபின் நிறைவேறிய சித்ராவின் பெரிய ஆசை.. ஆனால் அதை பார்க்கத்தான் அவர் இல்லை.. புலம்பும் ரசிகர்கள்..

Summary:

தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ரா தான் இறப்பதற்கு முன் நடித்த முதல் திரைப்படம் அடுத்த மாதம் இறுதியில் திரையில் வெளியாக உள்ளது.

தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ரா தான் இறப்பதற்கு முன் நடித்த முதல் திரைப்படம் அடுத்த மாதம் இறுதியில் திரையில் வெளியாக உள்ளது.

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்துவந்த இவர் சமீபத்தில் ஹோட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சித்ராவின் தற்கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் குறுகியகாலத்தில் சின்னத்திரையில் பிரபலமான சித்ராவுக்கு வெள்ளித்திரையில் படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. இந்நிலையில்தான் கால்ஸ் என்ற படத்தில் ஒப்பந்தமாகி அந்த படத்தில் நடித்து முடித்தார் சித்ரா.

இந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது டிசம்பர் 15-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி படத்தின் மற்றும், ஜனவரி மாத கடைசியில் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வெள்ளித்திரையில் பெரிய நாயகி ஆக வேண்டும் என்ற சித்ராவின் கனவு இப்படி முதல் படத்திலையே முடிவுக்கு வந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement