சினிமா

பெண்களை இழிவுபடுத்தி, பேருந்தில் எழுதப்பட்ட ஒற்றை வாசகம்! கடுப்பாகி சின்மயி கூறியுள்ளதை பார்த்தீர்களா!!

Summary:

chinmayi tweet about bus message about women

தமிழ் சினிமாவின்  பிரபலமான பாடகிகளில் ஒருவர் சின்மயி. இவரது குரலுக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சின்மயி பாடுவதையும் தாண்டி, பல்வேறு படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார் இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் .

மேலும் MeToo என்ற ஹாஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக தொடரும் பல வன்முறைகள் மற்றும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார். மேலும்  பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகிறார். இதனால் சின்மயி மீது பெரும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகள் கிளம்பியது.

CHINMAYI க்கான பட முடிவுஇந்நிலையில் சின்மயி தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோவையில் தனியார் பேருந்து ஒன்றில் பார்ப்பது கண்ணின் குற்றமல்ல, பார்க்க வைப்பது பெண்ணின் குற்றம் என வசனம் எழுதப்பட்டுள்ளது.மேலும் அதனுடன்  பெண்களுக்கான தகவல். எப்படி பெண்களை கேவலப்படுத்தும் விதமாக வசனங்களை எழுதி வைத்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.


Advertisement