#Breaking: நடிகை யாஷிகா ஆனந்த் கைது செய்ய பிடியாணை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு.! கார் விபத்து வழக்கில் அதிரடி.!
#Breaking: நடிகை யாஷிகா ஆனந்த் கைது செய்ய பிடியாணை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு.! கார் விபத்து வழக்கில் அதிரடி.!

கார் விபத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை யாஷிகாவை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில், கடந்த ஆண்டு தனது சொகுசு காரில் யாஷிகா ஆனந்த் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார்.
அவரின் பெண் தோழி மரணமடைந்த நிலையில், மற்றொரு நண்பரும் காயத்துடன் உயிர்பிழைத்துக்கொண்டார். விபத்தின் போது அவர் மதுபானம் அருந்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், யாஷிகா ஆனந்த் வழக்கு தொடர்பான விசாரணைக்கு சரிவர ஆஜராகவில்லை. இதனால் அவரை கைது செய்ய ஆணை பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.