காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
செக்க சிவந்த வானம் படத்தின் வசூல்...! மூன்று நாட்களில் வசூல் வேட்டை...!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கி தற்போது வெளியாகி இருக்கும் படம் "செக்க சிவந்த வானம்". இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதேரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரித்து உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
செக்க சிவந்த வானம் படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. மூன்று நாள் வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
#ChekkaChivanthaVaanam #CCV TN Box Office:
— Manobala Vijayabalan (@ManobalaV) September 30, 2018
Day 1 - ₹ 6.82 cr
Day 2 - ₹ 6.27 cr
Day 3 - ₹ 7.31 cr
Total - ₹ 20.40 cr