சினிமா

மீண்டும் நடுவராக வேறு சேனலுக்கு தாவிய செஃப் வெங்கடேஷ் பட்! அதுவும் எந்த நிகழ்ச்சியில் பார்த்தீர்களா??

Summary:

விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும் அதனையே பார்வையாளர்கள் ரசிக்கும் வகை

விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

குக் வித் கோமாளி முதல் சீசனில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் வனிதா வெற்றியாளரானார். அதனைத் தொடர்ந்து செம ஜாலியாக சென்று கொண்டிருந்த இரண்டாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் இறுதி நிகழ்ச்சி ஏப்ரல் 14-ஆம் தேதி புத்தாண்டு அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வருவது ரசிகர்கள் மட்டுமின்றி போட்டியாளர்கள், கோமாளிகள், நடுவர்கள் என அனைவருக்கும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நடுவர்களாக வரும் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவருமே போட்டியாளர்களிடம் கறாராக இல்லாமல் ரகளைகள் செய்து செம ஜாலியாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில் தமிழில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைவதை தொடர்ந்து செஃப் வெங்கடேஷ் பட் கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்ற பெயரில் ரீமேக்காகும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ள உள்ளாராம். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த நிலையில் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement