சினிமா

நடிகை சமந்தாவின் பிறந்தநாளுக்காக அவரது கணவரே உருவாக்கிய கேக்! வைரலாகும் புகைப்படங்கள்

Summary:

chaithanya bakes cake for samantha birthday

நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் தனது மனைவியும் நடிகையுமான சமந்தாவின் பிறந்த நாளிற்காக நடிகர் சைதன்யா தானே ஒரு கேக்கை தயார் செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் சமந்தாவின் பிறந்தநாள் மிகவும் எளிமையாக அவரது வீட்டிலே கொண்டாடப்பட்டது. நள்ளிரவு 12 மணியளவில் தனது கணவர் சைதன்யா தயார் செய்த கேக்கினை வெட்டி சமந்தா பிறந்தநாளை கொண்டாடினார்.

ஊரடங்கு அமலில் இருப்பதால் பேக்கரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பலரும் தங்கள் வீட்டில் இருப்பவர்களின் பிறந்தநாளை வீட்டிலே உருவாக்கும் கேக்குகளை வெட்டி தான் கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தனது மனைவியின் பிறந்தநாளுக்காக நடிகர் சைதன்யா ஒரு பிறந்தநாள் கேக்கினை தயார் செய்துள்ளார்.

கணவர் தனது பிறந்தநாளுக்காக தயார் செய்த கேக்கனை நடிகை சமந்தா நள்ளிரவு 12 மணிக்கு வெட்டி தனது கணவருடன் பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.


Advertisement