சினிமா

நடிகை ஓவியா மீது பாய்கிறதா தேசத்துரோக வழக்கு? பாஜக சார்பில் அதிரடி புகார்!! ஏன் தெரியுமா?

Summary:

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று செ

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நேற்று சென்னை வந்தார். மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போது #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகும். அவ்வாறு இந்த முறையும் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

அந்தவகையில் நடிகையும், பிரபல பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை ஓவியாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் #GoBackModi  ட்வீட் செய்திருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் ஓவியா மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஓவியாக்கான பட முடிவுகள்

அந்த புகாரில் அவர். பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையிலும் நடிகை ஓவியா 'கோ பேக் மோடி' என்று ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓவியா மீது 124 (எ) (தேசதுரோக வழக்கு), 153 (இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல்), 294 (அவதூறு) 69 (எ) ஐடி பிரிவு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement