பிரபல சினிமா பின்னணி பாடகி திடீர் தற்கொலை.! தாய்க்கு அனுப்பிய கடைசி வாட்ஸ்அப் மெசேஜால் அதிர்ச்சி.!
கன்னட திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடி பின்னணி பாடகியாக இருப்பவர் சுஷ்மிதா. 26வயது நிறைந்த இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கனகாபுராவை சேர்ந்த சரத்குமார் என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவரின் குடும்பத்தார் சுஷ்மிதாவை வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுஷ்மிதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும் நேற்று முழுவதும் தனது தாய் மற்றும் சகோதரனுடன் வெகுநேரமாக நிம்மதியாக பேசிக்கொண்டு இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து தூங்குவதற்காக சென்ற அவர் விடிந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இந்நிலையில் தனது மகள் கொஞ்ச நேரம் நிம்மதியாக தூங்கட்டும் என எண்ணிய அவர்கள் தங்களது செல்போனை பார்த்த போது பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் சுஷ்மிதா தற்கொலை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட அம்மா மற்றும் அவரது தம்பி இருவரும் கதறி துடித்துள்ளனர்.
இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாடகி சுஷ்மிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அவரது தாயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் இறுதியாக வாட்ஸ்அப்பில் அனுப்பிய தற்கொலை கடிதத்தை காட்டியுள்ளார். அதில் சுஷ்மிதா அம்மா என்னை மன்னிச்சிடுங்க. எனது மரணத்திற்கு காரணம் கணவர் சரத்குமார் அவரது பெரியம்மா வைதேகி மற்றும் சகோதரி கீதா.அவர்கள் அனைவரும் வரதட்சணை கேட்டு எனக்கு நிறைய தொல்லை தந்தனர்.எல்லாராலும் நான் மன மற்றும் உடல் ரீதியாக நொந்து போய்விட்டேன். அவர்கள் காலில் விழுந்தும் விடவில்லை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்தனர்.
நான் அங்கேயே தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்தேன்.ஆனால் முறையான ஆதாரங்கள் கிடைக்காது என்பதால்தான் இங்கு வந்தேன். எனது சாவிற்கு காரணமானவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள். சரியான தண்டனை வாங்கி கொடுங்கள். என்னை நம்ம ஊரிலேயே புதைச்சிடுங்க இல்லை எரிச்சிடுங்கள் என்று எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து வைதேகி, கீதா மற்றும் சரத்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.