சினிமா

வாவ்.. தல அஜித்தின் அசத்தலான புகைப்படத்துடன் பிரபல நடிகையின் கணவர் வெளியிட்ட பதிவு! கொண்டாடும் ரசிகர்கள்!!

Summary:

வாவ்.. தல அஜித்தின் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டு பிரபல நடிகையின் கணவர் வெளியிட்ட பதிவு! கொண்டாடும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான அதிரடி, ரொமான்டிக், குடும்பத் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவர்கள் திருவிழாக்களை போல கொண்டாடித் தீர்த்துவிடுவர். அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமாக இருந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் ஹூமா குரேஷி,  சுமித்ரா, யோகிபாபு, புகழ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் வில்லனாக நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

வலிமை படப்பிடிப்புக்கு இடையில் கிடைக்கும் நேரத்திலெல்லாம் அஜித் பைக் பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அவரை பற்றி பெருமையாக பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 


Advertisement