சினிமா

எனது மனைவியின் ஆசையை நிறைவேற்றி விட்டேன் - போனி கபூர் வெளியிட்ட ட்விட்!

Summary:

boney kapoor

தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது நாம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், அஜித்துக்கு ரசிகர் மன்றமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக போனி கபூர் தயாரிக்கும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் படமான நேர் கொண்ட பார்வை படத்தில் நடிக்கிறார் அஜித்.

அஜித் இப்படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம் ஸ்ரீதேவிக்கு அஜித் கொடுத்த வாக்குறுதி தான் காரணம்.தல அஜித்தும், ஸ்ரீதேவியும்  இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படப்பிடிப்பில் ஒன்றாக நடித்திருந்தனர். அந்த சமயம் அஜித், ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியின்படி போனிகபூர் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அஜீத்.

எனவேதான் போனி கபூர் தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற பிங்க் என்ற இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் நடிகர் அஜித்தை நடிக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் ட்விட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,'என் மனைவி ஸ்ரீதேவியின் கனவை பூர்த்தி செய்துள்ளேன். அஜித், H.வினோத் மற்றும் படக்குழுவினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை. இதை நான் எப்போதும் போற்றுவேன்' என பதிவிட்டுள்ளார்.


Advertisement