சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
எனக்கு அந்தமாதிரியான உலகம்தான் வேண்டும்! அப்பொழுதே என்னை எழுப்புங்கள்! பிரபல பாடகி எடுத்த அதிரடி முடிவு!
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு எதிரான படத்தில் நடித்த இவரே இத்தகைய விபரீத முடிவை எடுத்தது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால்தான் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். இந்த நிலையில் நெட்டிசன்களை சமாளிக்க முடியாமல் பல பிரபலங்களும் சமூகவலைதளங்களில் இருந்து விலகினர்.
-4q373.jpeg)
இந்நிலையில் தற்போது பாலிவுட் பாடகியான நேகா கக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் மீண்டும் தூங்க போகிறேன். சுதந்திரம், மரியாதை, அன்பு, நல்ல மக்கள், மரியாதை, கவனிப்பு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இவையெல்லாம் இருக்கும் உலகம் உருவான பிறகு என்னை எழுப்புங்கள். ஒற்றுமை, முதலாளித்துவமில்லாத, ஹிட்லர் இல்லாத, பொறாமையில்லாத, வெறுப்பில்லாத, கொலைகள், தற்கொலை இல்லாத உலகம்தான் வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் நான் சிலகாலங்கள் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுகிறேன் எனவும் கூறியுள்ளார்.