சினிமா

மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பிக்காக, மனமுடைந்து இரங்கல் தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகர்கள்!

Summary:

Bollywood actors tweet for condolences for spb dead

பாடும் நிலா பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இந்த மரணம்  திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களான சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் ஆகியோரும் மறைந்த எஸ்.பி.பிக்காக சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சல்மான்கான் வெளியிட்டுள்ள பதிவில், எஸ்.பி பாலசுப்பிரமணியம் சார் அவர்களின் மறைவை கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன். உங்களுடைய மறுக்க முடியாத இசை மரபின் மூலம் நீங்கள் என்றும் உயிர் வாழ்வீர்கள். அவரது குடும்பத்துக்கு எனது  அனுதாபங்கள் என வருத்தத்துடன்  கூறியுள்ளார். 

மேலும் நடிகர் ஷாருக் கான், எஸ்.பி.பி சாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். புகழ்பெற்ற பாடகரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஆனால் அவரது இனிமையான குரலை இழந்துவிட்டோம் என தெரிவித்துள்ளார். 


Advertisement