பிகில் ட்ரைலர் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு - உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள். - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பிகில் ட்ரைலர் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு - உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் சிங்கப்பெண்ணே பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது.இந்நிலையில் இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

மேலும் இப்படத்தின் டீஸர் எப்போதும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக AGS நிறுவனம் அறிவித்துள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo