கொள்ளை அழகில் விஜய்- நயன்தாரா.! சற்றுமுன் வெளியாகி இணையத்தையே கலக்கும் பிகில் ரொமான்டிக் பாடல்!!

கொள்ளை அழகில் விஜய்- நயன்தாரா.! சற்றுமுன் வெளியாகி இணையத்தையே கலக்கும் பிகில் ரொமான்டிக் பாடல்!!


bigil-romantic-song-leaked

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பிகில். இந்த படத்தை மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அட்லீ இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

Bigil

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் அப்படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் பாடலும் வெளியாகி இணையத்தில் மாஸ் காட்டியது. மேலும் படம் தீபாவளி அன்று வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சற்றுமுன் பிகில் படத்தின் மூன்றாவது பாடலான உனக்காக வாழ நினைக்கிறேன், உசுரோட வாசம் பிடிக்கிறேன் என்ற ரொமான்டிக் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.