சினிமா

விஜயின் பிகில் படத்திற்கு வந்த புதிய பிரச்சனை! வருத்தத்தில் விஜய் ரசிகர்கள்!

Summary:

Bigil new problem

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாவதாக படக்குழு கூறியிருந்தது.

இந்நிலையில் தற்போது பிகில் படத்திற்கு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது உதவி இயக்குனர் கே. பி.செல்வா தற்போது பிகில் படம் தன்னுடைய கதை என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் படம் தீபாவளிக்கு வருமா என்ற வருத்தத்தில் இருந்து வருகின்றனர். 


Advertisement