ரூ.9 கோடி இழப்பீடு வேண்டும்.. நடிகர் ரவி மோகன் தொடர்ந்த வழக்கு.! ஏன்? என்ன நடந்தது?
பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர்தானாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!

தற்போது தமிழகத்தில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வாரம் முதல் இந்த நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் தொகுப்பாளர் கமலஹாசன் அவர்கள் கடந்த வாரத்தின் ஆரம்பத்திலே இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வெளியேற்ற படுவார் என கூறியிருந்தார். அதன்படி நடிகை யாசிக்காவும், நடிகர் பாலாஜியும் கடந்த வாரம் வெளியேற்ற பட்டனர்.
மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதில் நடிகை ஜனனி நேரடியாக டாஸ்க் மூலம் ஃபைனலுக்கு செல்ல தேர்வாகி உள்ளார். இந்நிலையில் ஜனனியையும் அதற்கு அடுத்தபடியாக ரித்திகாவையும் தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
ஆனால் பிக்பாஸ் என்னவோ அந்த வீட்டிற்குள் உள்ளவர்களிடம் நடிகை ஐஸ்வர்யா எவ்வளவு மட்டமாக நடந்து கொண்டாலும் காப்பாற்றி விடுகிறார். இவ்வாறு நடிகை ஐஸ்வர்யாவை ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றி வருகிறது. இதனையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிக்பாஸ் டைட்டில் வின்னராக நடிகை ஐஸ்வர்யாவை அறிவிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது.