போட்ரா வெடிய.. உறுதியானது பிக்பாஸ் சீசன் 6 துவங்கும் தேதி..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!! 

போட்ரா வெடிய.. உறுதியானது பிக்பாஸ் சீசன் 6 துவங்கும் தேதி..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!! 


BiggBoss Season 6 Tamil Vijay TV

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6-வது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ அண்மையில் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் ஜி.பி.முத்து, ஷில்பா மஞ்சுநாத், விஜே ரக்சன், ஜாக்லின், ராஜலட்சுமி, நடிகை கிரண் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

biggboss

அதேபோல் நான்குபேர் பிரபலம் இல்லாத நபர்களும் போட்டியாளர்களாக களமிறங்க இருக்கின்றனர். வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பிக்பாஸ் 6 துவங்க இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் துவங்கும் என்று ஜமாத் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மிகவும் எதிர்பார்க்க வைத்துள்ளது.