
105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகர் ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகை எவ்வளவு என்பதுகுறித்து செய்திகள் வெளியாகிவருகிறது.
105 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகர் ஆரிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த தொகை எவ்வளவு என்பதுகுறித்து செய்திகள் வெளியாகிவருகிறது.
18 பிரபலங்கள் கலந்துகொண்ட பிக்பாஸ் தமிழ் சீசன் நான்கின் வெற்றியாளராக நடிகர் ஆரி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கான கோப்பை வழங்கப்பட்டதுடன், அவருக்கு 50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆரி பிக்பாஸ் போட்டியில் பெற்ற பரிசுத்தொகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பளம் என, அவருடைய மொத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
அதன்படி, நடிகர் ஆரிக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்த நாட்களில் தினமும் ரூபாய் 85 ஆயிரம் சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர் பிக்பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்ததால் அவருடைய மொத்த சம்பளம் 89 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும் என தெரிகிறது.
இதில் 30 சதவீதம் வரி போக, அவருக்கு மீதம் கிடைக்கும் தொகை 62 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய். இதனை அடுத்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்ற முறையில் அவருக்கு 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகையில் இருந்து 30% வரிப்பிடித்தம் போக 35 லட்சம் கிடைத்துள்ளது.
எனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளம் மற்றும் பரிசுத்தொகை என இரண்டையும் சேர்த்து, வரி போக நடிகர் ஆரிக்கு கிடைக்கும் தொகை ரூபாய் 97 லட்சத்து 47 ஆயிரத்து 500 ஆகும். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், கடந்த 105 நாட்களில் ஆரி ஒரு கோடீஸ்வரராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement