சினிமா

பிக் பாஸ் 3 : இந்த முறை எத்தனை பிரபலங்கள்? எத்தனை கேமிராக்கள் தெரியுமா? இதோ!

Summary:

Bigg boss season three total contestants list and cameras

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் மூன்று இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்க உள்ளது. சீசன் ஓன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால், சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் சீசன் மூன்றில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் ப்ரோமோ ஓன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி, இந்த முறை மொத்தம் 15 பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

மொத்தம் 60 கேமிராக்கள் பயன்படுத்தப்பட்ட உள்ளது. சீசன் ஒன்றில் 15 பிரபலங்கள் முதல் சுற்றில் கலந்துகொண்டனர். வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் 4 பேர் கலந்துகொண்டனர். சீசன் இரண்டில் 16 பிரபலங்கள் முதல் சுற்றிலும், வைல்ட் கார்ட் மூலம் ஒரு பிரபலமும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 


Advertisement