பிக்பாஸ் மூன்றில் கலந்துகொள்ளும் பிரபல விஜய் டிவி தொகுப்பாளினி? யார் தெரியுமா?

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது உண்டு. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. பிக் பாஸ் சீசன் ஓன்று மற்றும் இரண்டை பிரபல நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கினார்.
தற்போது சீசன் மூன்றை கமல் தொகுத்து வழங்க, பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் வரும் ஜுன் 23ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. அதையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நாளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் புரொமோக்கள் இதுவரை வெளியான நிலையில் நிகழ்ச்சி குறித்து ஒரு புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சி பிரபல தொகுப்பாளினி ப்ரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது போன்று ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.