பிரியும் நேரத்தில் உண்மையை கூறி அனைவர் மனதிலும் இடம்பிடித்த லாஸ்லியா! கண்ணீர் சிந்திய தர்ஷன்.BIgg boss lashliya speech before dharsan eviction

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 99 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன், சாண்டி, ஷெரின் மற்றும் லாஷ்லியா ஆகிய நால்வரும் இறுதி வாரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை சிறப்பாக விளையாடிவந்த தர்சன் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்துவந்த நிலையில் நேற்று அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது அனைவரும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில் பிக்பாஸ் மேடையில் இருந்து தர்சன் வெளியேறுவதற்கு முன்னர் அவரிடம் லாஷ்லியா கூறிய விஷயங்கள் தற்போது வைரலாகிவருகிறது.

bigg boss tamil

நீ வெற்றிபெறவேண்டும் என்றுதான் தான் நினைத்ததாகவும், அனைவரும் தர்சன் வெற்றிபெறவேண்டும் என கூறும்போது நான் அதை வெளியே சொல்லாவிட்டாலும் தர்சன் வெற்றிபெற வேண்டும் என்றுதான் மனதில் நினைத்திருந்ததாகவும் லாஷ்லியா கூறினார்.

மேலும், இதுவரை ஒருமுறை கூட நான் தர்சனை நாமினேட் செய்ததே இல்லை என லாஷ்லியா கூறும் போது தர்சன் கண்கலங்கினார். நீ பெரிய ஹீரோவாக வரவேண்டும் என்றும் நீ நடித்து வெளிவரும் படத்தை நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கவேண்டும் எனவும் லாஷ்லியா கூறினார்.