சினிமா

என் அண்ணா! என் அப்பா! பிக்பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பாத்திங்களா?

Summary:

Bigg boss julie with sakthi and director vasu

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

மக்களின் ஆதரவை பெற்று பிக்பாஸ் பட்டத்தை ஜூலி வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கூடா நட்பால் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார் ஜூலி. அன்றில் இருந்து இன்றுவரை இவர் என்ன செய்தாலும் நெட்டிசன்கள் இவரை கலாய்க்க தொடங்கிவிடுகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகர் சக்தி மற்றும் அவரது தந்தை பிரபல இயக்குனர் பி. வாசுவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜூலி. அதில், எனது அண்ணன், அப்பா என அவர்களை குறிப்பிட்டுள்ளார் ஜூலி. 


Advertisement