பாவம்! நொந்து போன பிக் பாஸ் ஜூலி! டிவிட்டரில் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ! இதோ!

பாவம்! நொந்து போன பிக் பாஸ் ஜூலி! டிவிட்டரில் கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ! இதோ!


bigg-boss-julie-cries-im-twitter-video

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இவர் பேசிய வசனங்கள் இவரை ஒரு வீர மங்கையாக தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியது. பலரும் ஜூலியை கொண்டாட ஆரம்பித்தனர். இந்நிலையில்தான் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த பிக் பாஸ் போட்டிக்கு ஜூலி தேர்வானார்.

மக்கள் ஆதரவு இவருக்கு ஏற்கனவே இருந்ததால் இவர்தான் பிக் பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர். ஆனால் எதிர் பார்த்ததுக்கு மாறாக மக்களின் வெறுப்பினை சம்பாதித்தார் ஜூலி. பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த காரியங்களால் மக்கள் இவரை வெறுப்பதோடு திட்டவும் ஆரம்பித்தனர்.

Bigg boss julie

இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து இன்றுவரை சமூக வலைத்தளத்தில் ஜூலியை வலைதளவாசிகள் பல்வேறு ஆபாச வார்த்தைகளால் திட்டி வந்தனர். இந்நிலையில் இது குறித்து கண்ணீருடன் பேசியுள்ளார் பிக் பாஸ் ஜூலி.

நான் என்ன தவறு செய்தேன்? பொய் தானே சொன்னேன்? யார் யார் வாழ்க்கையில் ஒரு பொய்யும் சொல்லாதவர்களோ அவர்கள் கமெண்ட் போடட்டும். நான் அரிச்சந்திரன் வம்சம், நீ ஏன் பொய் சொன்னாய் எனக் கேட்கட்டும். என்னால் யாரும் அழிந்து போகவில்லை.

ஒரு பெண்ணை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இதுபோலத் தவறாகப் பேசுவது தமிழர் பண்பாடு கிடையாது. ஒவ்வொருமுறையும் ஒரு கெட்ட கமெண்ட்டைப் பார்த்தால் என் மனம் வேதனை அடைகிறது. என்னைத் தரமான கமெண்ட் மூலம் திட்டியவர்களுக்கு நன்றி. அதை நான் வாசித்துள்ளேன். அதற்கேற்றவாறு என்னைத் திருத்திக்கொள்வேன். எனக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் நன்றி என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.