முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் குரானா நடிகைக்கு கொரோனா பாதிப்பு: அவரே வெளியிட்ட தகவல்!

Bigg boss hindhi season 13 contestant Actress himanshi khurana corona test positive


Bigg boss hindhi season 13 contestant Actress himanshi khurana corona test positive

நடிகை ஹிமான்ஷி குரானா தனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உஹான் நகரிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா போன்ற பெரிய நாடுகள் கொரோனா பாதிப்பினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸினால் பொதுமக்கள் தொடங்கி, சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 59,992, 532 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 49,41,627 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 94,503 பேர் உயிரிழந்துள்ளனர்.

Actress himanshi khurana

இந்நிலையில் பஞ்சாபி படங்களில் நடித்திருக்கும் நடிகையும், பாடகியுமான ஹிமான்ஷி குரானா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக இவர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பொறாததிற்கு பிறகு படப்பிடிப்பிற்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13 இல் கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

🙏🙏

A post shared by Himanshi Khurana 👑 (@iamhimanshikhurana) on