சினிமா

இரவு பார்ட்டியில் ஆண் நண்பருடன் பிக்பாஸ் ஐஸ்வர்யா! வெளியான ஷாக் புகைப்படம்!

Summary:

Bigg boss asihwarya lover photo goes viral

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. முதல் படத்திற்கு பிறகு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கும் வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்தது.

ஆரம்பத்தில் ஆடல் பாடல் என குதூகலமாக இருந்த ஐஸ்வர்யா போக போக மக்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். தனது கோபத்தாலும்,அத்துமீறிய செயல்களாலும் மக்களின் கோபத்திற்கு ஆளானவர் ஐஸ்வர்யா.

https://cdn.tamilspark.com/media/16824ny4-Aishwarya-Dutta.jpg

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இடது கையில் கோபி என்ற பெயரை பச்சை குத்தியிருந்தார். மேலும், தான் பிக் பாஸ் போட்டிக்கு வர கோபித்தான் காரணம் எனவும் கூறினார். இதனால் யார் அந்த கோபி என அனைவரும் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

தற்போது ஐஸ்வர்யா தத்தா தனது ஆண் நண்பர் ஒருவருடன் தனிமையில் இரவு பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இவர்தான் அந்த கோபியா? இவரைத்தான் ஐஸ்வர்யா காதலிக்கின்றாரா? என கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால், இவர்தான் கோபியா? இவரைத்தான் ஐஸ்வர்யா காதலிக்கின்றாரா என அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை.


Advertisement