பிக்பாஸ் அபிராமிக்கு இப்படி ஒரு வாய்ப்பா? முன்னணி இயக்குனர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!
பிக்பாஸ் அபிராமிக்கு இப்படி ஒரு வாய்ப்பா? முன்னணி இயக்குனர் படத்தில் கிடைத்த வாய்ப்பு!

உடல் எடை காரணமாக சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை அனுஸ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது 'சைலன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து வெளியீட்டு பணிகள் நடக்கின்றன. நான்கு மொழியில் வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் அனுஷ்கா அதை மறுத்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசும் ஹிந்தி படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் அனுஸ்கா நடிக்க இருப்பதாகவும், அந்தத் படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் பிக்பாஸ் சீசன் மூன்று புகழ் நடிகை அபிராமி அனுஷ்காவிற்கு வில்லியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.