எல்லாம் தாமரைக்காகவா.! போட்டியாளர்கள் செய்த காரியம்! ஃபீல் செய்து பாலா கொடுத்த பதிலடி!!

தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல் தொகுத்து வழங்க உள்ளார். நிகழ்ச்சி ஆரம்பமான சில தினங்களிலேயே சில போட்டியாளர்களின் செயல்களால் வீடே ரணகளமாகி வருகிறது.
ஜூலி, சினேகன், சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா,அபிராமி, அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி , தாமரை,ஸ்ருதி, அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் பிக்பாஸ் வீட்டில் தனது செயலை சிறப்பாக செய்த போட்டியாளர்கள் இருவரைத் தேர்வு செய்யக்கூற பலரும் ஸ்ருதி, பாலா, சுரேஷ் ஆகியோர்களின் பெயர்களை கூறுகின்றனர். அப்பொழுது பாலா இந்த வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் அவரது செயல்பாடு உள்ளது. ஆனால் அவரது பெயரை யாரும் கூறவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என கூறுகிறார். அப்பொழுது போட்டியாளர்கள் அமைதியாகியுள்ளனர். இந்த நிலையில் பாலா தாமரையைதான் குறிப்பிட்டு கூறியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.