
பிக்பாஸ் வீட்டில் டாஸ்கின் போது ஏற்பட்ட சண்டையால் அர்ச்சனா கன்பெஷன் ரூமிற்குள் சென்று கதறி அழுதுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில் இந்த வாரம் துவக்கத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்று பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடித்தது. இதில் ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தங்க முட்டை ஒன்று கொடுக்கப்பட்டது. இதனை நரிகளாக இருக்கும் போட்டியாளர்களிடமிருந்து அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்றும் அந்த டாஸ்க் தொடர்கிறது.
#Day73 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/oOdo9x0hgy
— Vijay Television (@vijaytelevision) December 16, 2020
ஆனால் இன்று நேற்றை விட போட்டியாளர்கள் செம ஆக்ரோசமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இன்றைய ப்ரமோவில், இந்த டாஸ்க்கால் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த அர்ச்சனா கன்பெக்ஷன் ரூமிற்குள் சென்று "பார்க்கும் போதே ரொம்ப பயமா இருக்கு. இந்த சண்டையை என் மொத்த வாழ்க்கையில் பார்த்தது இல்லை" என கூறி கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement