கேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல்! ஆவேசத்துடன் சீறிய பாலா! அனல் பறக்கும் வீடியோ!

கேப்ரில்லா, அர்ச்சனாவுடன் வெடித்த மோதல்! ஆவேசத்துடன் சீறிய பாலா! அனல் பறக்கும் வீடியோ!


Bigboss today second promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று 50 நாட்களை கடந்துள்ளது. மேலும் ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா ஆகிய 4 பேரும் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

 இந்நிலையில் பிக்பாஸ் வீடு இந்த வாரம் இரண்டு நாட்களுக்கு கால் செண்டராக மாறவுள்ளது. அதில் சில போட்டியாளர்கள் ஊழியர்களாக பணியாற்ற அவர்கள் வரைமுறையின்றி கஸ்டமர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.  இந்த நிலையில் பாலாவிற்கு  கேப்ரில்லா, அர்ச்சனாவுடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றவே ஆத்திரமடைந்த அர்ச்சனா பாலாவை கண்டு இனிமேல் என்னை அக்கா என அழைக்க வேண்டாம்  அர்ச்சனா என்றே கூப்பிடலாம் என்பதைப்போல பேசியுள்ளார். இந்த அனல் பறக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.