ஆட்டம் ஆரம்பமா? ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்த வீட்டையும் ஷாக்காகிய பிரபலம்! யார் அது? வைரலாகும் வீடியோ!!

ஆட்டம் ஆரம்பமா? ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்த வீட்டையும் ஷாக்காகிய பிரபலம்! யார் அது? வைரலாகும் வீடியோ!!


Bigboss today promo viral

பிக்பாஸ் சீசன் 5 விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் சுவாரசியமாகவும், ரணகளமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிகென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சில வாரங்களுக்கு முன்பு பிரபல சீரியல் நடிகரான சஞ்சீவ் களமிறங்கியுள்ளார்.

இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதங்கள், மோதல்கள் நிலவி வருகிறது. மேலும் இந்த வாரம் தாமரை மற்றும் பிரியங்காவிற்கு இடையே சச்சரவு ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து இருவரும் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், தாமரையிடம் பிரியங்கா ஏதோ கேள்வி கேட்கிறார்.

அப்பொழுது சிபி வேறு எதையோ கேட்க, அபிஷேக் எழுதி வைத்ததை கேட்குமாறு கூறுகிறார். ஆனால் அதற்கு சிபி மறுத்த நிலையில், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பொழுது கோபத்தில் சிபி பேப்பரை கிழித்து தூக்கி வீசிவிட்டு செல்ல, சண்டை பெரிதாகிறது. இந்த நிலையில் Silent என்று யாரோ பயங்கர சத்தத்துடன் கத்துகின்றனர். இந்த குரல் சஞ்சீவ் குரல் போல உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் ஆட்டம் ஆரம்பமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.