சினிமா

இவரது வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா! அனைவரையும் கண்கலங்க வைத்த பிரபலம்! வைரலாகும் வீடியோ!!

Summary:

இவரது வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா! அனைவரையும் கண்கலங்க வைத்த பிரபலம்! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரமாண்டமாக துவக்கமானது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். 

 மேலும் இந்த சீசனில் ஏராளமான புதுமுகங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். முதல் நாள் நேற்று போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் ஜாலியாக பேசிக்கொண்டு மிகவும் கலகலப்பாக சென்றது. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்வதற்கான டாஸ்க் கொடுத்துள்ளார்.

அப்பொழுது போட்டியாளரான இசைவாணி, தன் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டதாக தனது சோகமான காலங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். அதனைக் கேட்ட சக போட்டியாளர்கள் அனைவரும் கண்கலங்கியுள்ளனர். இரண்டாவது நாளில் முதல் ப்ரோமோவான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement