சினிமா

அடேங்கப்பா!! இந்த சீசனில் பிக்பாஸ் குரலுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Summary:

இந்த சீசனில் பிக்பாஸ் குரலுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று சமீபத்தில் முடிவடைந்தது. 

உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 18  போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ராஜு  டைட்டில் வின்னர் பட்டத்தை  வென்றார்.

 இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டை குரலில் பின்னணியில் இருந்து வாய்ஸ் கொடுப்பவர் சாஷோ. இவருடைய குரலுக்கு பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி  ஏராளமான ரசிகர்கள்  உள்ளனர். சாஷோ பிக்பாஸ் நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சி அல்லது திரைப்படத்துக்கும் இதுவரையில் இவர் வாய்ஸ் கொடுத்ததில்லை.

பிக்பாஸ் 5 சீசனுக்கு அவர் பெற்றிருப்பதாகக் கூறப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டாலே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த ஒரு சீசனுக்கு மட்டும் அவருக்கு ரூ.17.5 லட்சம் ஊதியமாக வழங்கப்பட்டதாம். அதாவது, 3 மாதமாக கணக்கிட்டால், மாதம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் வாங்கியிருக்கிறார் சாஷோ.

 


Advertisement