பைனலுக்கு செல்ல பிக்பாஸ் கொடுத்த செம சான்ஸ்! முழுமூச்சுடன் இறுதிவரை நிற்பது யார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!

பைனலுக்கு செல்ல பிக்பாஸ் கொடுத்த செம சான்ஸ்! முழுமூச்சுடன் இறுதிவரை நிற்பது யார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!


bigboss-promo-video-viral-b4heuw

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 ,13 வாரங்களை கடந்து சென்று கொண்டுள்ளது. மேலும்  நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா, அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியிருந்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர்  நாமினேட் ஆகியிருந்த நிலையில் ஆஜித் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, ரியோ, பாலா, சோம், கேப்ரில்லா, ரம்யா, ஷிவானி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.  இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில்  டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெறவுள்ளது.

அதில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதில் பெண் போட்டியாளர்கள் அனைவரும் வாய்ப்பை இழந்த நிலையில், ஆரியும்,சோமும் வாய்ப்பை தவற விட்டுவிடுகின்றனர். அதனை தொடர்ந்து ரியோ மற்றும் பாலா இருவரும் இறுதி வரை போட்டியில் நின்று கொண்டிருக்கின்றனர். இதில் யாருக்கு டிக்கெட் கிடைக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது