பிக்பாஸ் வீட்டில் மலர்கிறதா மீண்டுமொரு புதிய காதல்!! வெளியான வீடியோவால் ஷாக்கான ரசிகர்கள்!!



bigboss praamo video viral

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இந்நிலையில் பிக்பாஸ் வீட்ற்குள் சென்ற இரண்டாவது நாளே சரவணன் மீனாட்சி புகழ் கவின் மீது  போட்டியாளர் அபிராமிக்கு காதல் ஏற்பட்டது. 

mugen

அதனை தொடந்து அவரே கவினிடம் தனது காதலை  நேரடியாக தெரிவித்தார். ஆனால் கவின் அவரை காதலை ஏற்றுக்கொள்ளாமல் நண்பர்களாக இருக்கலாம் என எஸ்கேப் ஆனார். அதனை தொடர்ந்து கவின் சாக்ஷி, லாஸ்லியா என அவரது காதல் பாதைகள் மாறிக்கொண்டே போனது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் குறித்த பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் வீட்டில் யாருடன் இருந்தால் உங்களுக்கு பொழுதுபோவதே தெரியாது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முகேன் அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என கூறியுள்ளார். மேலும் அபிராமியும் முகேன் எனக்கூறி அவரை புகழ்ந்து பேசுகிறார் இறுதியில் ஐ லவ் யூ என்று கூறுகிறார். இதனை கேட்டு வெட்கப்படுவது போன்று முகேன் நகங்களை கடிக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.