இது வேற லெவல்.! விஜய்யாக மாறி ரம்யா கிருஷ்ணனையே அலறவிட்ட பார்த்து- தாமரை.! வைரலாகும் வீடியோ!!

இது வேற லெவல்.! விஜய்யாக மாறி ரம்யா கிருஷ்ணனையே அலறவிட்ட பார்த்து- தாமரை.! வைரலாகும் வீடியோ!!



bigboss-jodikal-promo-video-viral-UJQYTP

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதன் முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் வெற்றி பெற்றனர் இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜு மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் நடுவர்களாக உள்ளனர்.

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் தாமரை செல்வி, அவரின் கணவர் பார்த்தசாரதியுடன் கலந்துகொண்டு ஒவ்வொரு நாளும் தங்களது திறமையை வளர்த்துக்கொண்டு அசத்தலாக நடனமாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தாமரை மற்றும் பார்த்தசாரதி இருவரும் குஷி பட விஜய் மற்றும் ஜோதிகாவாக மாறி நடனமாடியுள்ளனர். அதனை கண்டு குஷியில் ரம்யாகிருஷ்ணன் கத்தி உற்சாகப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.