கம்பெனி சீக்ரெட்.. லியோ படத்தில் பிக்பாஸ் ஜனனிக்கு இந்த முக்கிய ரோலா?? அவரே அளித்த பளீச் பதில்!!

கம்பெனி சீக்ரெட்.. லியோ படத்தில் பிக்பாஸ் ஜனனிக்கு இந்த முக்கிய ரோலா?? அவரே அளித்த பளீச் பதில்!!



bigboss-janani-answer-about-his-character-in-leo-movie

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படத்தில் நடித்து வருகிறார். லியோ  என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷா நடிக்கிறார். மேலும் அவர்களுடன் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லியோ படம் குறித்த சில தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது லியோ படத்தில் தளபதி விஜய் 50 வயது நிறைந்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Leo

மேலும் அவருக்கு மகளாக விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்த ஜனனி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் இதுகுறித்து அவரிடம் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லியோவில் விஜய்க்கு மகளாக நடிக்கிறீர்களா? என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அது கம்பெனி சீக்ரெட்  என சிரித்தவாறே பதில் அளித்துள்ளார்.