அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் 4 போட்டியாளர்கள்! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு! வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

அடுத்த வார நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் 4 போட்டியாளர்கள்! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு! வைரலாகும் ப்ரோமோ வீடியோ!


Bigboss day 4  promo video viral

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷனுக்கு நடிகை ரேகா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தற்போது மூன்று நாட்கள் கடந்துள்ளது.இதில் மக்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான சில பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர். 

மேலும் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி முதல் நாளிலேயே சூடுபிடிக்கத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்க்கையில் தாங்கள் கடந்து வந்த கடினமான பாதை குறித்து பேசினர். இதில் சிலரது வாழ்க்கை அனுபவங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் நான்காவது நாளின் முதல் ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தங்களது அனுபவங்களை கூறிய போட்டியாளர்களில் இருந்து அடுத்த வாரம் நாமினேஷனுக்கு ரேகா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.