சினிமா

ஏன் இப்படி? பிக்பாஸ் ஆர்த்தி வெளியிட்ட வேற லெவல் புகைப்படத்தால் கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் !!

Summary:

bigboss aarthi post latest photo with elephant

தமிழ் சினிமாவில் வடிவேலு விவேக் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, காமெடி காட்சிகளில் கலக்கியவர் காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ். ஆர்த்தி கணேஷ் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவில் வருவது அவரது குண்டான தோற்றமே. அதனை வைத்து ரசிகர்கள் மற்றும் பலரும்  கிண்டல் செய்தாலும் ஆர்த்தி அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்.

நடிகை ஆர்த்தி தமிழில் சினிமாக்களில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

bigboss aarthi க்கான பட முடிவு

 மேலும் அந்நிகழ்ச்சியில் அனைவரையும் கிண்டல் செய்து பேசி வந்ததாலும், கடுகடுவென நடந்து கொண்டதாலும் ரசிகர்களால் விமர்சனத்திற்கு ஆளானார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆர்த்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் படங்களில் நடிப்பது என மீண்டும் பிசியாகி விட்டார்

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் யானையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் இனத்தோடு இனம் சேர்ந்துவிட்டது. ஒரு யானையின் பெயர் தேவயானை. மற்றொரு யானையின் விவரம் உங்களுக்கே தெரியும் என பதிவிட்டுள்ளார். 

இதனைக் கண்ட ரசிகர்கள் உங்களை நீங்களே கலாய்த்துக் கொண்டால் நாங்கள் எதற்கு உள்ளோம்  என கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


Advertisement