பிக்பாஸ் ஆரியின் மனைவி மற்றும் அழகிய குழந்தையை பார்த்திருக்கீர்களா! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!

பிக்பாஸ் ஆரியின் மனைவி மற்றும் அழகிய குழந்தையை பார்த்திருக்கீர்களா! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!



Bigboss aari family photo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி தற்போது நான்கு  நாட்கள் கடந்துள்ளது. இதில் மக்களுக்கு ஓரளவிற்கு பரிச்சயமான சில பிரபலங்கள் போட்டியாளராக  கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில புதுமுகங்களும் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் ஆரி. இவர் வந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல மரியாதையை பெற்றுள்ளார். நடிகர் ஆரி ரெட்டை சுழி,  நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் பல சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

aari

நடிகர் ஆரியின் மனைவி நதியா. நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இருவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ரியா அனகாரிகா  என்ற மகள் உள்ளார். 

aari

மேலும் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரி தான் கடந்து வந்த கஷ்டமான காலங்களில் தனது மனைவி தனக்கு உறுதுணையாக நின்றதாகவும், எங்களது திருமணத்தை கூட அவர்தான் நடத்தினார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஆரியின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

aariaari