பிக்பாஸ் வெற்றியாளர் ஆரி உங்களை நேரில் சந்தித்து பேசாதற்கு மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 பல சுவாரசியங்களுடன் நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் நடிகர் ஆரி அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஆரி ரசிகர்கள் அவரை கொண்டாடினர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரி எப்பொழுது எங்களை சந்திக்கப் போகிறீர்கள் என அவரது ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Waiting to meet u all very soon❤ pic.twitter.com/Ed0iNxGpaK
— Aari Arjunan (@Aariarujunan) January 20, 2021
அதில் உங்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக காத்திருந்தேன். ஆனால் டிக்கெட் டு பினாலே நாளிலிருந்தே எனக்கு உடம்பு சரியில்லை. அது இன்னும் சரியாகவில்லை. சீக்கிரம் வந்து உங்களை சந்திக்காததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
வெகுவிரைவில் உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்வேன். இது என்னுடைய வெற்றி அல்ல. உங்களது வெற்றி. நேர்மைக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றி. விரைவில் உங்களை நேரடியாக சந்திப்பேன். உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். ஒரு சகோதரனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து என் அன்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என உருக்கமாக கூறியுள்ளார்.
Advertisement
Advertisement