சினிமா

பிக்பாஸ் சீசன் 3 தோழிகள் இணைந்து அடித்துள்ள லூட்டிகளை பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்

Summary:

Big boss 3 Shakshi abirami sherin

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அனைவராலும் விரும்பப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கியது முதல் காதல், சண்டை, பாசம், ஆட்டம், நகைச்சுவை என மாறி மாறி அமைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் அணி என்று கவின், சாண்டி, முகேன், தர்ஷன், லாஸ்லியா இவர்கள் செய்த குறும்புக்கு அளவே இல்லை.அந்த அளவிற்கு அனைவராலும் ரசிக்க பட்டது. இதில் மக்கள் மனதை வென்று பிக்பாஸ் பட்டத்தை முகேன் தட்டி சென்றார்.

இந்நிலையில் தற்போது பெண்கள் ஒன்றாக இணைந்து அடித்துள்ள லூட்டிகளை பாருங்கள். சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழிகளான அபிராமி, ஷெரின் ஆகிய மூவரும் இணைந்து ஆட்டம் போட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பலரும் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 


Advertisement