அந்த கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவன்.. நிச்சயம் பலிக்கும்.! நம்பிக்கையில் நடிகர் சூர்யா!!
பிக்பாஸ் புகழ் மீரா மிதுனா இது! ஆண் நண்பருடன் சேர்ந்து என்னா ஒரு ஆட்டம்; வைரலாகும் வீடியோ.!
பிக்பாஸ் புகழ் மீரா மிதுனா இது! ஆண் நண்பருடன் சேர்ந்து என்னா ஒரு ஆட்டம்; வைரலாகும் வீடியோ.!

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
இந்த சீசனில் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. முதலில் 15 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பபட்டனர். இந்நிலையில் 16வது போட்டியாளராக மீரா மிதுன் என்பவர் உள்ளே நுழைந்தார்.
பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை மீரா மிதுன். இவரது உண்மையான பெயர் தமிழ்ச்செல்வி. சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த இவர், மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு அழகிப்பட்டம் வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இந்நிலையில் தமிழ் பெண்களுக்கு அழகிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்து தமிழ் பெண்களுக்காக அழகிப் போட்டி நடத்த திட்டமிட்டார்.
இந்நிலையில், அழகிப் போட்டியை நடத்தக் கூடாது என்று சிலர், தன்னை மிரட்டுவதாகவும் தன் சமூக வலைத்தள பகத்தை முடக்கி தவறாக பதிவிடுவதாகவும் காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இதனிடையே அழகி போட்டி நடத்த மீரா மிதுன் அனுமதி பெறவில்லை என்றும், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக 2016ல் அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு பகிரங்கமாக அறிவித்தது. இனி மேல் அந்த பட்டத்தை எங்கும் அவர் பயன்படுத்த அனுமதியில்லை என எச்சரித்தது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் நுழைந்த போதே அபிராமி, சாக்ஷி ஆகியோருக்கு பெரிய ஷாக்காக இருந்தது. அவர் உள்ளே வந்த நாளன்றே வீட்டிற்குள் சண்டை வரும் அறிகுறி வந்துவிட்டது. அதன் படியே இரண்டாவது நாள் அபிராமி மூலம் மிராமிதுனிற்கும் வனிதாவிற்கும் சண்டை வந்தது.
தற்போது சமூகவலைதளங்களில் அவர் தனது ஆண் நண்பருடன் ஆபாசமாக நடினமாடியாக சில வீடியோக்கள் உலா வருகின்றன.