அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இந்த வயதில் நடிகை திரிஷா பீச்சில் கொடுத்துள்ள போஸ்சை பாருங்கள்! வைரலாகும் த்ரிஷா புகைப்படம்.
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் 1990ஆம் ஆண்டு அறிமுகமானவர் திரிஷா. அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மௌனம் பேசியதே, கில்லி, ஆயுத எழுத்து, கிரீடம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட.
90'ஸ் கிட்ஸ்கிற்கு மிகவும் பிடித்தமான நடிகை என்றால் அது திரிஷா தான். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் 10 வருடத்திற்கு மேல் டாப் நாயகியாக வலம் வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். பிறகு பட வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டு இருந்த இவருக்கு 96 திரைப்படம் அவரது சினிமா வாழ்வில் புதிய திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது திரிஷா, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இயக்கும் 'ராங்கி' படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'பரமபத விளையாட்டு' படத்தின் டீசர் இரு மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் நடிகை திரிஷா மாலத்தீவில் கடற்கரையோரம் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.